St.Aloysius Church

Wonderful view during church feast 2013

Charriot

Charriot of our church

St.Aloysius Chapel

Inside view of our chapel

St.Aloysius Church

view 2012 Church Feast

Wednesday, 13 August 2014

Vazhi Kattum Yen Deivamae-song lyrics


வழிகாட்டும் என் தெய்வமே....பாடல்  வரிகள்.

 



வழிகாட்டும் என் தெய்வமே....துணையாக எனில் வாருமே...[2]
நதி மீது அலைந்தாடும் அகல் போலவே...
கதி ஏதும் தெரியாமலே... நான் தடுமாறும் நிலை பாருமே...
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி..
எனைத் தாங்கும் என் தெய்வமே... என் நிழலாக எழும் தெய்வமே...(வழிகாட்டும்...)

I

எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்க்கிறேன்.
உன் பாத நிழல் நாடும் மனம் கேட்க்கிறேன்.....
நீரின்ற்றியே மண்ணில் வளம் இல்லையே...
நிலவின்ற்றியே உயிர் வாழ்வில்லையே...
எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்க்கிறேன்.
உன் பாத நிழல் நாடும் மனம் கேட்க்கிறேன்.....
எனைக்காக்கும் என் தெய்வமே.. என் உயிராக எழும் தெய்வமே..
நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடி பயனேது..
துயர்மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகை ஏது...
மலராக கைமீது வா.. இங்கு குறையாவும் நிறையாக வா...(வழிகாட்டும்...)








II

என் பாதை முடிவாகும் உன் தாழிலே..
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே..
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ..
உன் பார்வைகள் என் வழியாகுமோ...
என் பாதை முடிவாகும் உன் தாழிலே..
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே..
இருள் நீக்கும் விளக்காகவே...நான் சுடர் வீச எனை ஏற்றவா...
ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே..
விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன்தானே..
இறைவாழ்வின் நிறையாகவே....எங்கள் நிலவாழ்வு பயன் காண வா.....(வழிகாட்டும்)